For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமன்வெல்த் ஊழல்-சுரேஷ் கல்மாடியின் உதவியாளர் கைது

By Chakra
Google Oneindia Tamil News

Kalmadi
டெல்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பாக காமன்வெல்த் நிர்வாகக் கமிட்டியின் தலைவர் சுரேஷ் கல்மாடியின் உதவியாளர் சேகர் தியோருக்கர் இன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு நிகரானது என்று கூற முடியாவிட்டாலும் மிகப் பெரிய ஊழல் காமன்வெல் விளையாட்டுப் போட்டி ஊழல். காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் சுரேஷ் கல்மாடியும், அவரது குழுவில் இருந்தவர்களும்.

இந்த வழக்குகளையும் சிபிஐ விசாரித்து வருகிறது. காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி சமீபத்தில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந் நிலையில் அவரது உதவியாளரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. விரைவில் கல்மாடியையும் சிபிஐ கைது செய்யக் கூடும் என்று தெரிகிறது.

English summary
The Central Bureau of Investigation (CBI) has arrested former Commonwealth Games Organising Committee chairman Suresh Kalmadi's personal assistant Shekhar Deorukhkar in Pune. Deorukhkar has been produced before the Shivaji Nagar court with the CBI seeking his transit remand.
 He has been arrested in connection with the Commonwealth Games scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X