For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூனிடெக் நிறுவன அதிகாரிகளும் கைதாகிறார்கள்!!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: ஸ்வான் தொலைத்தொடர்பு அதிபர் ஷாகித் பால்வாவைத் தொடர்ந்து யூனிடெக் நிறுவன அதிகாரிகளும் கைதாகிறார்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய மற்றொரு நிறுவனமான யூனிடெக் நிறுவன அதிகாரிகளையும் சி.பி.ஐ. கைது செய்ய திட்டமிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் மூலம் 267 சதவீதத்தை யூனிடெக் நிறுவனம் லாபமாக பெற்றுள்ளது. ஆனால் 2007-2008-க்கிடையே நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 60 சதவீதம் மட்டுமே லாபம் பெற்றதாக யூனிடெக் அறிவித்திருந்தது. இந்நிலையில் யூனிடெக் நிறுவன அதிகாரிகளை கைது செய்ய சி.பி.ஐ. முடிவெடுத்துள்ளது.

யூனிடெக் நிறுவனம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 22 உரிமங்களை பெற்றுள்ளது. இதற்கான மொத்த மதிப்பு 6100 கோடி ரூபாய் ஆகும். ஆனால் யூனிடெக் நிறுவனம் 1658 கோடி ரூபாய் மட்டுமே தொலைத்தொடர்பு துறைக்கு வழங்கியுள்ளது.

ஸ்வான், யூனிடெக் இரு நிறுவனங்களின் மூலம் 7105 கோடி ரூபாயை அரசு இழந்துள்ளது. மொத்தம் உள்ள 122 உரிமங்களில் 35 உரிமங்களை ஸ்வான், யூனிடெக் ஆகிய இரு நிறுவனங்களே பெற்றுள்ளது. ட்ராய்ன் பரிந்துறையின் பேரில் இந்த இரு நிறுவனங்களுக்கு உரிமம் ஒதுக்கப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்வான், யூனிடெக் இரு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்பு துறைக்கும் உள்ள முழு ஒப்பந்தங்கள், உறவுகள் அனைத்தையும் 5 பக்க எப்.ஐ.ஆராக சி.பி.ஐ. தயாரித்துள்ளது.

English summary
The CBI, nodal agency for investigation planned to arrest Unitec officials soon, after the supreme court's verdict released yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X