For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலர் தினம்: களை கட்டிய வியாபாரம்-ரூ.12,000 கோடிக்கு வர்த்தகம்!

By Chakra
Google Oneindia Tamil News

Velentines Day Gift
டெல்லி: காதலர் தினத்தையொட்டிய ஒரு வாரத்தில் நாடு முழுவதும் ரூ.12,000 கோடி அளவுக்கு சிறப்பு வர்த்தகம் நடந்துள்ளதாக இந்திய வர்த்தக சபை ஆய்வு தெரிவித்துள்ளது.

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் காதலர் தினம் கலைகட்டியது. அவரவர் வசதிக்குத் தகுந்தார்போல் பரிசுப் பொருட்கள் கொடுத்து மகிழ்ந்தனர்.

காதலர் தினத்தால் வாழ்த்து அட்டை, ரோஜா, பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வியாபாரம் அமோகமாக நடந்தது.

காதலர் தினத்திற்காக காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்தவர்களை மகிழ்விக்க எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று இந்திய வர்த்தக சபை ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 10 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது.

காதலர் வாரம் பிப்ரவரி மாதம் 7ம் தேதி துவங்கி 14ம் தேதி முடிவடைகிறது. இதில் ஒவ்வொரு நாளும் கீழ்கண்ட வகையில் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 7- ரோஜா தினம்

8 - காதல் வெளிப்படுத்தும் தினம்

9 - சாக்கலேட் தினம்

10- டெட்டி தினம்

11- வாக்குறுதி தினம்

12 - முத்த தினம்

13 - தழுவும் தினம்

14 - காதலர் தினம்

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காதலர் வாரத்தில் காதலர்கள் 120 சதவீதம் அதிகமாக செலவு செய்துள்ளார்கள் என்று இந்திய வர்த்தக சபை செகரடரி ஜெனரல் டி.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் சீரடைந்துள்ளதாலும், தனி நபர் செலவு அதிகரித்திருப்பதாலும் இளைஞர்கள் இந்த ஆண்டு அதிகம் செலவு செய்வர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விற்பனையில் வாழ்த்து அட்டைகள் முதலிடத்தை பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்களை பூக்கள், சாக்கலேட், பொம்மைகள், விலை உயர்ந்த வைர மோதிரம், கைவளை, நெக்லஸ், ரெடிமேட் ஆடைகள், செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் பிடித்துள்ளன.

இது குறித்து ஆர்ச்சீஸ் லிட்-ன் கார்பரேட் தொடர்பு தலைவர் யோஹான் ஆரியா ஐஏஎன்எஸ்-க்கு தெரிவித்ததாவது,

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஆர்ச்சீஸ் வருமானம் 16 சதவீதம் அதிகரிக்கும். மேலும், விற்பனை வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகமாகும்.

காதலர் தினத்திற்கென்று பிரத்யேகமாக 171 புதிய வாழ்த்து அட்டைகள் எங்களிடம் உள்ளது. அவை ரூ. 50 முதல் 699 வரை விற்கப்படுகின்றன. இது தவிர நாங்கள் புதிதாக 220 ஸ்பெஷல் பரிசுப்பொருட்கள் அறிமுகப்படுத்திகிறோம். அவை இதய வடிவ மிருதுவான பொம்மைகள், போட்டோ பிரேம், கோப்பைகள், புத்தகங்கள், பைகள், குடுவைகள், வாசனை மெழுதுவர்த்திகள், உலோக மெழுவர்த்தி ஸ்டான்ட்கள், கிரிஸ்டல் ஆகியவை ஆகும்.

இதையெல்லாம் இளைஞர்கள் தவிர 40 முதல் 50 வயது வரை உள்ளவர்களும் வாங்குகின்றனர் என்றார்.

இந்த ஆய்வில் வேலை பார்ப்போர், கல்லூரி மாணவ-மாணவியர் உள்ளிட்ட ஆயரத்து 200 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரவர் வருமானத்திற்கு ஏற்ப காதலர் தினக் கொண்டாட்டத்திற்காக ரூ. 5,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

English summary
This year Valentine's week sees Rs. 12,000 crore business. This is 120% higher when compared to the last year. Assocham conducted a study on the spendin in the Valentine's week starting from february 7 and ending on 14. It is found that people are ready to spend from Rs. 5000 to Rs. 1, 50, 000 to make their loved ones happy. Every year during this week greeting cards and gift items retailer Archies business increases 10 times than the normal time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X