For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனது சொத்து விவரங்களை கொடுக்கக் கூடாது-முன்னாள் தலைமை நீதிபதி கே. ஜி.பாலகிருஷ்ணன்

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எனது சொத்து விபரங்களை யாருக்கும் கொடுக்க கூடாது என்று தகவல் உரிமை சட்ட அதிகாரிக்கு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், அவருடைய சகோதரர் கே.ஜி. பாஸ்கரன், மருமகன் ஸ்ரீநிஜன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக சமீபத்தில் புகார்கள் வந்தன. இதையடுத்து அவர்கள் 3 பேரின் சொத்து விபரங்களைத் தெரிவிக்குமாறு எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாலசந்திரன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார். அதை கேரள தகவல் உரிமை ஆணையாளர் நிராகரித்தார்.

தகவல் அறியும் உரி்மை சட்டத்தில் தனது சொத்து விபரங்களை யாருக்கும் கொடுக்க கூடாது என வருமான வரித்துறை, மத்திய தகவல் உரிமை சட்ட அதிகாரி சுதாகரன் பிள்ளை ஆகியோருக்கு கே.ஜி. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதனால் அவருடைய சொத்து விபரங்களை என்னால் தர முடியாது என கேரள தகவல் உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

English summary
The Kerala income tax department has refused to give asset details of former chief justice KG Balakrishnan under the right to information act. KG Balakrishnan has written a letter requesting them not to reveal his asset details. Dr. Balachandran from Ernakulam has applied under the right to information act seeking the details of KGB's asset but his petition is rejected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X