For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறைப்பிடிக்கப்பட்ட 136 மீனவர்களும் இன்று விடுதலை!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 136 மீனவர்களையும் விடுவிக்க யாழ்பாணம் நீதிமன்றத்துக்கு அந்நாட்டு அரசு டிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று விடுவிக்கப்படுகின்றனர்.

அவர்களை நீதிமன்றம் விடுவித்து இலங்கை வட பகுதி டிஜிபியிடம் ஒப்படைக்கவுள்ளது. இதையடுத்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப டிஜிபி நடவடிக்கை எடுப்பார் என இலங்கை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, நாகப்பட்டினத்தை சேர்ந்த 112 மீனவர்கள், சிங்கள மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் கடத்திச்செல்லப்பட்டு இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மேலும் 24 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவில் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.

சிங்கள மீனவர்கள் கடற்படையினருடன் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதலில், தமிழக மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதில் படுகாயம் அடைந்த ராஜா முகமது என்ற மீனவர், கடற்படையினரின் பிடியில் இருந்து தப்பி கரை சேர்ந்தார்.

தமிழகத்தில் கொந்தளிப்பு:

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் 136 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

இந்தியா கண்டனம்:

இதற்கிடையில், 136 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு, இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படியும் இலங்கை அரசிடம் அவர் வற்புறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:

"இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ்சுடன் தற்போதுதான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு இந்தியாவின் சார்பில் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்தேன்.

கச்சத்தீவு ஒப்பந்தம்:

இலங்கை மீனவர்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நமது மீனவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக, இரு தரப்பு கூட்டு செயல் நடவடிக்கை குழு விரைவில் கூடிப்பேசி விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

இருநாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிப்பது குறித்து அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என்றும் யோசனை தெரிவித்து இருக்கிறேன். கச்சத்தீவுக்கு என்று தனி வரலாறு உள்ளது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சர்வதேச நடைமுறைக்கு உட்பட்டது. எனவே இந்த விவகாரத்தில், யாரும் தனிப்பட்ட எந்த முடிவும் எடுக்க முடியாது.

136 மீனவர்களும் விடுதலை ஆகிறார்கள்:

இந்தியா-இலங்கைக்கு இடையே எப்போதும் பரஸ்பரம் நல்லுறவு இருந்து வருவதால், இந்த பிரச்சினையில் பதற்றத்தை தணிப்பதற்கு நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்றும், சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இலங்கை அரசின் தலைமை வக்கீலிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படுவார்கள்" என்றார்.

English summary
External Affairs Minister S.M. Krishna has spoken to his Sri Lankan counterpart G.L. Peiris to secure the release of 136 Indian fishermen arrested by the island Navy over the past few days.
 “I am hopeful that the Sri Lankan Government will take all the necessary steps to release all Indian fishermen,'' he told journalists here after a telephonic conversation with Peiris on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X