For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் மரணம்!

By Shankar
Google Oneindia Tamil News

Parvathi Ammal
வல்வெட்டித்துறை: விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இலங்கை, வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக அவர் வல்வெட்டித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவரை பெருவாரியான சிங்கள மக்கள் சென்று பார்த்து, வணங்கிச் சென்றனர்.

அவருடைய வாரிசுகள் வெளிநாடுகளில் இருப்பதால், இறுதிக் காரியங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை வரை அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று எம்கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வன்னி இறுதிப் போரின்போது பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இருவருமே ராணுவ முகாமுக்கு அடைக்கலமாக வந்தனர். இருவரையும் தனி முகாமில் வைத்திருந்தது ராணுவம். கடந்த ஆண்டு வேலுப்பிள்ளை காலமானார்.

அதைத் தொடர்ந்து பார்வதி அம்மாள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மலேசியாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார் பார்வதி. பின்னர் மேல் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வந்த அவரை, விமான நிலையத்தில் இறங்கவும் அனுமதிக்கவில்லை இந்திய அரசு. அப்படியே திருப்பியனுப்பப்பட்டார்.

மீண்டும் மலேசியாவுக்கே திரும்பிய அவர், ஒரு மாதத்துக்குப் பிறகு இலங்கை சென்றார். வல்வெட்டித் துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். முதலில் அனுமதி மறுத்த இந்திய / தமிழக அரசுகள், நீதிமன்ற உத்தரவின்பேரில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வருமாரு அழைத்த போதும், அதனை அவர் ஏற்கவில்லை.

English summary
Vallipuram Parvathi, the mother of LTTE leader Velupillai Prabhakaran, passed away on Sunday morning at a Jaffna Hospital. Cofirming this, the Army said that the death came at around 6-30 am. TamilNet, in a post, said that after the demise of her husband in January 2010, Mrs. Parvathi was released and was later allowed to go to Malaysia for medical treatment in March 2010. She was denied entry to Tamil Nadu and deported back to Malaysia last year. Later, she was brought to her home village of Valveddiththu'rai and the local hospital was treating her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X