For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஜேபிசி விசாரணை-பிரதமர் அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று இன்று லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ள எதிர்க்கட்சிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கிப் போனது. தங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் மிரட்டல் விடுத்தன.

இதையடுத்து லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது ஜேபிசி விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

இதுகுறித்த அறிவிப்பை இன்று பிரதமர் மன்மோகன் சிங் லோக்சபாவில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஜேபிசி விசாரணை கோரிக்கையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால் அதுகுறித்த அறிவிப்பை பிரதமர் இன்று வெளியிட்டார்.

ஜேபிசி கமிட்டியை அமைப்பது தொடர்பான தீர்மானம் நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்மானம் பின்னர் மேலவைக்கு அனுப்பப்பட்டு அங்கு நிறைவேற்றப்படும். அதன் பின்னர் ஜேபிசி அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 37 கட்சிகள் இருப்பதால் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் பிரமாண்டமானதாக இந்த ஜேபிசி அமைய வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரியுள்ளன.

ஆனால், இந்த கூட்டுக்குழுவில் 21 உறுப்பினர்களை மட்டும் இடம்பெறச் செய்வது என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.

கூட்டுக் குழுத் தலைவர் யார்?:

இந் நிலையில் இந்தக் கூட்டுக் குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி. கிஷோர் சந்திர தேவ், பி.சி. சாக்கோ, கிரிஜா வியாஸ் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்களுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். அதில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே. ஆண்டனி, ப.சிதம்பரம், பவன்குமார் பன்சால் மற்றும் அகமது படேல் ஆகியோர் பங்கேற்றனர்.

மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் அறிக்கையை அளிக்குமாறு இந்த ஜே.பி.சி குழுவை கேட்டுக் கொள்வது என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக அரசியல் விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழுவும் இதே விஷயம் குறித்து விவாதித்தது. அதில் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஆண்டனி தவிர அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷீத், கபில் சிபல், மம்தா பானர்ஜி, தயாநிதி மாறன் ஆகியோரும் பங்கேற்றனர்.

English summary
Prime Minister Manmohan Singh who is expected to make the announcement of Joint Parliamentary Committee to probe the 2G Spectrum allocation scam in the Lok Sabha today. Almost all of the Winter Session of Parliament was washed out because of the adamant stance of the Government and Opposition on the issue of JPC and both sides do not want such thing to repeat in the Budget Session. Parliamentary sources said that a formal motion for constituting a JPC would be moved on February 24 by Telecom Minister Kapil Sibal. Thereafter the JPC motion would be referred to the Upper House for its approval.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X