For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமா மீண்டும் வந்தால் அனுமதிக்கப்படுவார்! - இலங்கை அரசு

Google Oneindia Tamil News

Tirumavalavan
கொழும்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பார்வதி அம்மாளின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக இன்று மீண்டும் இலங்கை வந்தால் அனுமதிக்கப்படுவார் என்று அந்நாட்டின் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.

பார்வதியம்மாளின் மரணச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை அவர் கொழும்பில் இறங்கியபோது அனுமதி மறுக்கப்பட்டு, அடுத்த விமானத்திலேயே திருப்பியனுப்பப்பட்டார்.

'அவர் ஒழுங்கான முறையில் தனது வருகையின் நோக்கத்தைத் தெரியப்படுத்தவில்லை.அதன் காரணமாகவே அவர் திருப்பியனுப்பப்பட்டார்' என்று அந்நாட்டின் குடியேற்றத்துறை அதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களின் அத்துமீறல் குறித்து மிகுந்த கொந்தளிப்புடன் உள்ளதாகவும், இந்த நிலையில் தமிழக அரசியல்வாதியொருவரை அங்கு அனுமதிப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று கருதியதனாலேயே அவர் திருப்பியனுப்பப்பட்டதாகவும் இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆயினும் அவர் விமான நிலையத்தில் வைத்து பார்வதி அம்மாளுடைய இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள மட்டுமே வருகை தந்திருப்பதாக தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் அதிகாலையிலே அவருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்போது கூட மீண்டும் அவர் இலங்கை வரும் பட்சத்தில் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகளில் மட்டும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது இலங்கை.

English summary
The wedding of Varun Gandhi and Yamini Roy Chowdhury will be performed in a purely 'Sanatani' tradition under the supervision of Shankaracharya of Kanchi Kaamkoti Peetham, Swami Jayendra Saraswati in Varanasi on March 6. It will be held at Shri Kashi Kaamkotishwar Temple, one of the few temples constructed in purely South Indian architectural style in North India and governed by Kanchi Kaamkoti Peetham (KKP), on Hanuman Ghat. Only a limited number of guests will be invited at the time when Varun and Yamini tie the nuptial knot. But, the arrival of Shankaracharya on this occasion has been confirmed, reveals manager of temple and mutt VS Mani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X