For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணவீக்கம் 7 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படும்! - பிரதமர்

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: பணவீக்கத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று அவர் பேசுகையில், "பணவீக்கம், தற்போது நாட்டின் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது உண்மைதான். கடந்த 18 மாதங்களாக நாட்டின் பெரிய பிரச்சினையாக உள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசு மேற்கொள்ளப்பட்டுள்ள பல அதிரடி நடவடிக்கைகளின் பலனாக, உணவுப் பணவீக்க விகிதம் கடந்த சில வாரங்களில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

வேளாண் பொருட்கள் உற்பத்தியை துரிதப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள‌ோம். அதுபோல உள்நாட்டுப் பாதுகாப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்", என்றார்.

English summary
Prime Minister Manmohan Singh Thursday admitted that high inflation was a 'problem' and said he hoped that it will come down to seven percent by March. 'Inflation in the last 18 months has become a problem. We stand committed to control inflation,' Manmohan Singh told the Lok Sabha, replying to a debate on the motion of thanks on the president's address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X