For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்செக்ஸ் பெரும் வீழ்ச்சி: 545 புள்ளிகள் சரிவு!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு பெரும் வீழ்ச்சியை இன்று சந்தித்தது இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ்.

உணவு பணவீக்கம், மத்திய கிழக்கு நாடுகளாக லிபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 545.92 புள்ளிகள் சரிந்து 17632.42 ஆக முடிந்தது.

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிக பட்சமாக 18135.12 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக 17599.70 புள்ளிகள் வரையிலும் சென்றது. கடந்த 18 மாதங்களில் மிக அதிக வீழ்ச்சியை சென்செக்ஸ் இன்றுதான் சந்தித்துள்ளது.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிக பட்சமாக 5423.40 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக 5242.50 புள்ளிகள் வரையிலும் சென்றது. வர்த்தக இறுதியில் 174.65 புள்ளிகள் சரிந்து 5262.70 புள்ளிகளுடன் முடிந்தது. குறிப்பாக முதலீட்டுப் பொருள் (3.96%) நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவினை சந்தித்தன.

அதிக சரிவை சந்தித்த நிறுவனங்கள் (சதவீதத்தில்): டாடா மோட்டார்ஸ் -6.46%,
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்-6.33%, ரிலையன்ஸ் கேப்பிடல்-5.79%,
ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டக்சர் -5.33%, எல் அண்டு டி-5.51%,

லாபம் அடைந்த நிறுவனங்கள் (சதவீதத்தில்):

செய்ர்ன் இந்தியா +1.79%, சுஸ்லான் எனர்ஜி +1.55%, ஹீரோஹோண்டா +0.73%.

தேசிய பங்கு சந்தையில் முதலீட்டாளர்களில் 2281 பேர் நட்டமும்,514 பேர் லாபமும் அடைந்தனர். இன்றைய பங்கு சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்தனர்.

English summary
The BSE benchmark sensex plunged over 618 points before recovering a little to close at 17,632.41 on Thursday. The fall was triggered by all-round selling, as investors dumped stocks on worries over rising oil prices, inflation and interest rates. Sensex ended the day with a loss of about 546 points -steepest single day fall in 18 months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X