For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சற்றே மீண்டது சென்செக்ஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

நேற்று பெரும் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று சற்றே மீட்சியில் முடிவடைந்தது.

பெரும்பாலான பங்குகள் சரிவிலிருந்து மீண்டன. ஆனாலும் சென்செக்ஸ் 18000 புள்ளிகளைத் தாண்டவில்லை. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிக பட்சமாக 17812.44 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக 17469.97 புள்ளிகள் வரையிலும் சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 68.50 புள்கள் வரை உயர்ந்து 17700.91 ஆக முடிந்தது.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்சமாக 5338.20 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 5232.75 புள்ளிகள் வரையிலும் சென்றது. இறுதியில் 40.85 புள்ளிகள் வரை உயர்ந்து 5303 ஆக முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ஐடிஎப்டி (5.02%), டாடா மோட்டார்ஸ் (4-94), ஐடிசி(3.85%), ஐ.சி.ஐ.சி.ஐ.-(3.51%) மற்று ஆக்ஸிஸ் வங்கி (3.00 %) உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் அடைந்த நிறுவனங்களாகும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (-5.31%), ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டக்சர்(-4.18%), மகேந்திரா அண்டு மகேந்திரா (-3.69%), ஸ்டெர்லைட் இண்டஸ்ரீஸ் (-2.48%), ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (-2.80%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

English summary
In a highly volatile trade, sensex today gained over 68 points to close at 17,700.91 on fresh buying in blue-chips at lower levels amid the Economic Survey projecting strong economic growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X