For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்ச்செல்வன் மறைவு விடுதலைப்புலிகளுக்கு பேரிழப்பு: விமானப்படை தளபதி குணதிலகே

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்திற்கு பேரிழப்பு என்று இலங்கை விமானப்படைத் தளபதி ரோஷன் குணதிலகே தெரிவித்துள்ளார்.

இது குறி்தது ரோஷன் குணதிலகே தெரிவத்ததாக இலங்கை தமிழ் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்திற்கு பேரிழப்பு. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் பலரை விமானப் படை கண்காணித்து வந்தது. அதில் தமிழ்ச்செல்வனும் ஒருவர்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது கிளிநொச்சி இருப்பிடம் பற்றி புலனாய்வுத் தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அது வெற்றிகரமாக முடிந்தது.

தமிழ்ச்செல்வனின் மறைவால் மற்ற விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. அதனாலேயே அவர்கள் தலைமறைவாக வாழ்ந்தனர். இந்த காரணத்தினால் தான் இறுதிக்கட்ட போரில் அவர்களை எளிதாக தோற்கடிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.

English summary
Lankan air chief Roshan Gunathilage has told that LTTE political wing leader Tamilselvan's death was a great loss for them. After his death, many LTTE leaders got scared and absconded. This paved way to defeat them easily in the final stages of the war, he added. Sri Lankan based tamil websites published this news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X