For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடி அபராதம்!

By Shankar
Google Oneindia Tamil News

Infosys
டெல்லி: தவறான முறையில் வரிவிலக்குப் பெற்ற இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை. இத்தகவல் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனம் இன்போஸிஸ். ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தங்கள் ஊழியர்களை குறுகிய கால பணிக்காக அனுப்பி வைக்கிறது இந்நிறுவனம் (ஆன்ஷோர்).

இந்த வகையில், கடந்த 2007-2008-ம் ஆண்டு ரூ 657.81 கோடி இன்போஸிஸ் நிறுவனத்துக்கு வருவாயாக வந்துள்ளது. அதை ரூ 456.38 கோடியாக குறைத்துக் காட்டியுள்ளனர். இதனை ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயாகக் காட்டி வரிவிலக்குப் பெற முயன்றுள்ளது இந்நிறுவனம்.

"ஆன்ஷோர் பணிகள் மூலம் பெறப்படும் வருமானம் வரிவிலக்கின் கீழ் வராது. இது வர்த்தக ஏற்றுமதிப் பிரிவிலும் சேராது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக மக்களவையில் தெரிவித்தார் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்எஸ் பழனிமாணிக்கம். இதனால் இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடியை அபராதமாக விதித்துள்ளது வருமான வரித்துறை.

English summary
The income tax department has slapped a tax demand of over Rs 450 crore on software giant Infosys Technologies for wrongfully claiming tax exemption on onshore services by declaring them as software exports, Parliament was informed on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X