For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச் 1ல் ராஜ்யசபாவில் ஜேபிசி தீர்மானம்-பிரதமர் கொண்டு வருகிறார்

Google Oneindia Tamil News

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க உருவாக்கப்படும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தொடர்பான தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் வரும் செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறார்.

30 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதற்கான ஒப்பதல் கேட்டு பிரதமர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டு வருகிறார்.

லோக்சபாவிலிருந்து 20 பேரும், ராஜ்யசபாவிலிருந்து 10 பேரும் இந்தக் குழுவில் இடம் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர்கள் ரவி சங்கர் பிரசாத் மற்றும் எஸ். எஸ். அலுவாலியா ஆகியோரது பெயர்களை அக்கட்சி ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. திருச்சி சிவா (திமுக) , எஸ்.சி. மிஷ்ரா (பகுஜன் சமாஜ்) , அபிஷேக் சிங்வி மற்றும் ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்) மற்றும் சீதாராம் யெச்சூரி (சிபிஐ (எம்) ) ஆகியோரது பெயர்களும் குழு உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்படவிருக்கின்றன.

English summary
PM Manmohan Singh will make a motion in the upper house on tuesday about the JPC. It is expected that it will get approval. This committee will have 10 members from the Rajyasabha and 20 from the Loksabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X