For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 3% குறைப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Petrol prices
சென்னை: பெட்ரோல் மீதான விற்பனை வரியை தமிழக அரசு 3 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 38 பைசா குறையும்.

கடும் விலைவாசி உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறிது உதவும் வகையில் மத்திய பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பையும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடவில்லை.

இந் நிலையில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக தமிழக அரசு குறைத்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.

இதன்மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை 1 ரூபாய் 38 பைசா குறையும். இந்த வரிக் குறைப்பு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 210 கோடி இழப்பு ஏற்படும்.

வரிக் குறைப்பைத் தொடர்ந்து தென் மாநிலங்களிலேயே மிகவும் குறைவான விற்பனை வரி தமிழகத்தில்தான் உள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 5 குறைவாகவே உள்ளது.

English summary
Tamil Nadu CM Karunanidhi has slashed sales tax on Petrol price. Now the sales tax is 30%. CM has ordered to slash 3% in the tax. After this tax cut petrol price will come down 138 paise per litre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X