For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியது எச்டிஎப்சி!

By Shankar
Google Oneindia Tamil News

HDFC Logo
மும்பை: நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் வசதி நிறுவனமான எச்டிஎப்சி, வட்டியை மீண்டும் 25 புள்ளிகள் (கால் சதவீதம்) உயர்த்தியுள்ளது.

கடந்த மாதம்தான் இந்த வங்கி 25 புள்ளிகள் சில்லறை வட்டி வீதத்தை உயர்த்தியது. இப்போது மீண்டும் உயர்த்தியுள்ளதன் மூலம் 15.25 சதவீதத்திலிருந்து 15.50 சதவீதமாக வட்டி உயர்ந்துள்ளது.

எச்டிஎப்சி வங்கியின் இந்த வட்டி வீத உயர்வைத் தொடர்ந்து, மற்ற வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டியை உயர்த்தவிருக்கின்றன.

கடந்த நிதியாண்டில் மட்டும் படிப்படியாக 175 புள்ளிகள் வரை வட்டியை உயர்த்தியது எச்டிஎப்சி என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கடன்பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 9.75 சதவீதமும், ரூ 30 முதல் 75 லட்சம் வரையிலான கடன்களுக்கு 10 சதவீதமும், 75 லட்சத்துக்கு மேற்பட்ட கடனுக்கு 10.25 சதவீதமும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

English summary
Home loans for HDFC borrowers have turned more expensive with the mortgage finance company revising its benchmark rates for the second time in less than four weeks. On Monday, the country's largest mortgage finance company said it was increasing its retail prime lending rate (RPLR) on housing loans by 25 basis points (bps). Last month, HDFC raised its RPLR by 25 bps to 15.25% following a 25 bps hike in key interest rates in the monetary policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X