For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் காரிய கமிட்டி மாற்றம்-ப.சி நிரந்தர அழைப்பாளர்

By Chakra
Google Oneindia Tamil News

P Chidambaram
டெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டிலிருந்து அர்ஜூன் சிங், மேஷினா கித்வாய், வீரப்ப மொய்லி போன்ற மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய அமைச்சரான ஆஸ்கர் பெர்னாண்டஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கட்சியின் முக்கிய நிர்வாகக் குழுவான காரிய கமிட்டியை இன்று மாற்றி அமைத்தார் அக் கட்சியின் தலைவரான சோனியா காந்தி. அதில் மூத்த தலைவர்களும் சோனியாவுக்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தியில் சோனியாவை தாக்கிப் பேசிய ஜி.வெங்கடசாமியும் காரிய கமிட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே போல சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ள மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கேசவ ராவ் கமிட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, திக்விஜய் சிங், ஜனார்தன் திவிவேதி, முகுல் வாஸ்னிக், ஹரிபிரசாத் ஆகியோர் மீண்டும் காரிய கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு்ள்ளனர்.

மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான், மல்லிகார்ஜூன கார்கே, நாராயணசாமி, மூத்த எம்பி கிஷோர் சந்திர தியோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்

சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமத் படேலும் தொடர்ந்து காரிய கமிட்டியில் இடம் பிடித்துள்ளார். கட்சியின் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்தக் கமிட்டியில் சோனியாவை சேர்த்து இப்போது 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

காரிய கமிட்டிலிருந்து நீக்கப்பட்ட அர்ஜூன் சிங், மேஷினா கித்வாய் ஆகியோர் காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சத்யவிரத் சதுர்வேதி நிரந்தர அழைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக குலாம் நபி ஆசாத் தொடர்ந்து நீடிப்பார் என்றும் தேசிய இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளராக ராகுல் காந்தி நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரிய கமிட்டி உறுப்பினரான சிதம்பரம், நிரந்தர அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
Ahead of five Assembly elections, Congress chief Sonia Gandhi on Friday reconstituted the party’s highest policy making body, the Congress Working Committee (CWC), dropping dissidents and including new faces. Prominent among veteran leaders dropped are Arjun Singh and Mohsina Kidwai. G Venkatswami, who had recently targeted Gandhi, was also dropped from the new list. Rahul Gandhi will continue to be general secretary incharge of Youth Congress and National Students Union of India (NSUI).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X