For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரந்தர வைப்புகளுக்கு வட்டியை உயர்த்தியது ஓரியண்டல் வங்கி!

By Shankar
Google Oneindia Tamil News

Oriental Bank of Commerce
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ‌ஒன்றான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி), நிரந்த வைப்புத் தொகைகளுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பிரிவுகளில், இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1 வருடம் முதல் 499 நாட்கள் வரையிலான நிரந்தர வைப்புத் தொகை மற்றும் 501 நாட்களிலிருந்து 2 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு தரப்பட்டு வந்த 8.50 சதவீத வட்டி, 9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த 9 சதவீத வட்டி விகிதம், 15 லட்சத்திற்கும் குறைவான மற்றும் 15 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரையிலான நிரந்தர வைப்புத் தொகைகளுக்குப் பொருந்தும். இந்த புதிய வட்டி விகிதம், இந்த மாதம் 7ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PSU lender Oriental Bank of Commerce (OBC) today raised fixed deposit rates up to 50 basis points on two select maturities. Fixed deposit rates for maturity between one year to 499 days and that of 501 days to two years have been raised from 8.50 per cent to 9 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X