For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலமலாக்கப் பிரிவு விசாரணையில் ஹஸன் அலி!

By Shankar
Google Oneindia Tamil News

Hasan Ali
டெல்லி: பல்லாயிரம் கோடி கறுப்புப் பண பதுக்கல் மற்றும் வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக பிரபல தொழிலதிபர் ஹஸன் அலியிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, ஹஸன் அலியை அவரது புனே வீட்டில் வைத்து , கறுப்புப் பண பதுக்கல், வருமான வரி ஏய்ப்பு மற்றும் அவை குறித்த உண்மைகளைச் சொல்ல மறுத்த குற்றத்துக்காக கைது செய்தனர் அமலாக்கப்பிரிவினர்.

ஹஸன் அலிக்குச் சொந்தமான 24 இடங்களிலும், அவரது நண்பர்கள், உதவியாளர்கள் உள்லிட்டோரது வீடுகளிலும் சோதனையும் மேற்கொண்டனர்.

புனேயைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் பண்ணை அதிபரான ஹஸன் அலி, 1999-ம் ஆண்டிலிருந்து வரி கட்டாமல் ஏய்த்து வந்துள்ளார். இதன் மதிப்பு மட்டும் ரூ 45000 கோடி. இதுதவிர, வெளிநாடுகளில் ரூ 40000 கோடி வரை கறுப்புப் பணம் பதுக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்புள்ளதாக கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் இதனை முற்றாக மறுத்துள்ளார் ஜெயலலிதா.

இப்போது ஹஸன் அலி அமலாக்கப் பிரிவின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள நிலையில், பல பரபரப்பான தகவல்கள் வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Alleged tax evader Hasan Ali Khan was on Monday taken to the Enforcement Directorate for interrogation. An ED team had earlier swooped on the Pune house of Hasan Ali, accused of stashing black money abroad, to ascertain his whereabouts. The ED also raided about 24 other locations in four different cities linked to Hasan Ali and his aides.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X