For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிகவில் 30 மாவட்ட செயலாளர்களுக்கு சீட் - விஜயகாந்த் பட்டியல்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: தே.மு.தி.க.வில் உள்ள 30 மாவட்ட செயலாளர்களுக்கு இந்த முறை எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.விற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் தொகுதிகள் பட்டியலும் அ.தி.மு.க.விடம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் அல்லது உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார்.

அவரது மனைவி பிரேமலதா விருகம்பாக்கத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஏனைய தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர். பாணியில் கட்சிக்காக உழைத்த, எக்கச்சக்கமாய் செலவழித்த மாவட்ட செயலாளர்களுக்கு இந்த முறை முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கட்சி தொடங்கிய 5 ஆண்டு காலம் முதல் உழைத்த நிர்வாகிகளை முன்னிலைப்படுத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் தேர்தல் களத்தில் எதையும் சமாளிக்க கூடியவராகவும் எதிர்த்து போராடக்கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர்களையும் தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் தே.மு. தி.க.வில் உள்ள 57 மாவட்ட செயலாளர்களில் 30 பேரை தேர்வு செய்து வாய்ப்பு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். அந்த 30 மாவட்ட செயலாளர்கள் பட்டியலையும் விஜயகாந்த் தயாரித்துள்ளார்.

மீதமுள்ள 10 வேட்பாளர்களாக மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எந்தெந்த மாவட்ட செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவது என்று பட்டியலை விஜயகாந்த் தயாரித்து உள்ளார். விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் தொகுதி வாரியாக நேர்காணல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிடுவார்.

English summary
DMDK president Vijayakanth has decided to give opportunity tp contest in coming election for 30 of his part district secretaries. He has prepared the detailed list of them and the same will be released soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X