For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொழுது போகாமல் தவிக்கும் கசாப்-சிறையில் கசாப் கராத்தே கற்கிறான்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை தாக்குதல்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப் பொழுதை போக்க சிறையில் கராத்தே பயிற்சி மேற்கொள்வதாக போலீசார் தெவித்துள்ளனர்.

மும்பை தாக்குதல்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கசாப் பாதுகாப்பு அதிகமுள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அங்கு குண்டு துளைக்காத அறையில் வைக்கப்பட்டுள்ளான். அவனை பூனேவில் உள்ள ஏராவாடா மத்திய சிறைக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,

நேரத்தைப் போக்க கசாப் உடற்பயிற்சி மற்றும் கராத்தே பயிற்சி மேற்கொள்கிறான். குத்து விடுவதில் கை தேர்ந்தவனாக காணப்பபடுகிறான். அவனுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கும் சிறை காவலர்களிடம் அவ்வப்போது கலந்துரையாடுகிறான்.

அவன் சிறைக் காவலர்களிடம் என்ன தான் பேச முயன்றாலும் அவர்கள் அனிடம் பேசுவதை தவிர்த்து வருகின்றனர். சில நேரம் கசாப் காவலர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு எத்தனை ஆண்டுகளாக பணிபுரிகிறீர்கள்? என்பது போன்று பல கேள்விகளைக் கேட்பான் என்றார்.

கசாப் தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளான்.

English summary
Pakistani terrorist Kasab is practising karate in the prison to kill time. Kasab has been awarded death sentence for his involvement in the 26/11 attacks. He is kept in a bomb proof cell in Arthur road prison. He may be shifted to Yerawada central prison in Pune.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X