For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அந்த 63 தொகுதிகள்': திமுக-காங் குழுக்கள் பேசி முடிவு-அழகிரி

By Chakra
Google Oneindia Tamil News

Azhagiri
சென்னை: காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் குறித்து திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் சந்தித்துப் பேசி முடிவு செய்வர் என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே பிரச்சனையைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகி்த்த அழகிரி நேற்றிரவு 1 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.

அவருடன் மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திசெல்வன் ஆகியோரும் வந்தனர். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அழகிரி அளித்த பேட்டி:

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திமுக- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டணிதான் வெற்றி கூட்டணி. தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தொடரும் என்றார்.

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டதா என்று கேட்டதற்கு, இரு கட்சிகளிலும் உள்ள ஐவர் குழுவினர் இது தொடர்பாக பேசி தொகுதிகளை முடிவு செய்வார்கள். அதுவும் சுமூகமாக முடியும் என்றார்.

English summary
Minister Azhagiri told that DMK and congress teams will discuss about the 63 constituencies. He is happy about the patchment between the two parties. He is confident about the victory of DMK alliance in the TN assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X