For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

63 நாயன்மார்களும் காஙகிரஸ் கட்சியும்...கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: காங்கிரஸ் கட்சியினர் பெற்றுள்ள இந்த 63 தொகுதிகளை அவர்கள் பக்தி மனப்பான்மையுடன் வரவேற்பார்கள் என நம்புகிறேன். புராணங்களில் வரும் 63 நாயன்மார்களைப் போன்று அவர்களுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேமுதிகவிலிருந்து விலகி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் 3,000 பேர் திமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று கருணாநிதி பேசுகையில், சட்டசபைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடுபவர்களை தேர்வு செய்யும் நேர்காணல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேளையில், இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.

ஒன்று, தேமுதிகவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நம்முடன் இணைகின்றனர்.

இரண்டாவது, காலை முதல் தொகுதி உடன்பாடு குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் நிறைவை எட்டியுள்ளது. திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளிடையே தொகுதிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதன்படி, திமுக 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63 தொகுதிகளிலும், பாமக 30 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும், கொமுக 7 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், ஸ்ரீதர் வாண்டையாரின் இயக்கமான மூ.மு.க. ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

பேச்சுவார்த்தையின் இடையே இழுபறி, தயக்கம் என்ற நிலை இருந்தாலும் கூட நம்முடைய அந்த நிலையை பத்திரிகைகள் தரக்குறைவாக எழுதி இந்தக் கூட்டணி ஏற்படக் கூடாது என்ற ஆத்திரத்துடனும், கோபத்துடனும், தவறாக திசை திருப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டனர். அவர்களுக்கு நல்ல பதிலாக இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. அவர்களுக்கு நல்ல பதிலாக இந்த அறிவிப்பு இருக்கும் என எண்ணுகிறேன்.

பலத்தோடு பலம் சேர்ந்துள்ளன. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, தோழமை உணர்வு, நட்புக்கரம் நீட்டுதல் ஆகியவற்றுக்கு சான்றாக பா.ம.கவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் நடந்து கொண்டுள்ளன.

பாமகவுக்கு முதலில் 31 தொகுதிகள் தருவதாகக் கூறியிருந்தாலும் கூட, அவர்கள் காங்கிரஸூக்காக ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி விட்டுக் கொடுத்துள்ளனர்.

இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் மூன்று தொகுதியில் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளது. இதன்மூலம் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க உதவியுள்ளன. இதற்காக பாமக, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியினர் பெற்றுள்ள இந்த 63 தொகுதிகளை அவர்கள் பக்தி மனப்பான்மையுடன் வரவேற்பார்கள் என நம்புகிறேன். புராணங்களில் வரும் 63 நாயன்மார்களைப் போன்று அவர்களுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் எனது வாழ்த்துகள் என்றார் கருணாநிதி.

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு விவரம்:

திமுக- 121

காங்கிரஸ்- 63

பாமக- 30

விடுதலைச் சிறுத்தைகள்- 10

கொங்கு நாடு முன்னேற்ற கழகம்- 7

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 2

மூவேந்தர் முன்னேற்ற கழகம் (ஸ்ரீதர் வாண்டையார்)- 1

இதன்மூலம் 1980ம் ஆண்டு்க்குப் பின் மிகக் குறைந்த இடங்களில் திமுக போட்டியிடுகிறது. அந்த வருடத்தில் 112 இடங்களில் திமுக போட்டியிட்டது. மற்ற எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் 122 இடங்களுக்கும் அதிகமான இடங்களிலேயே திமுக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
After a weekend and another day of political uncertainty, the DMK on Tuesday conceded to the Congress’ demand for 63 seats under a seat-sharing deal for the Tamil Nadu Assembly elections. This is 15 seats more than it contested the last time. The DMK will put up candidates in 121 seats, less than it has ever contested in the polls. Karunanidhi used his literary flourish to announce the pact: "I am happy the deal has been struck. Like 63 nayanmars (Tamil Shaivaite saints), you (Congress) have been given the 63 seats. You should accept it with the same amount of bhakti like nayanmars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X