For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முரசு சின்னத்தை நிரந்தரமாக்க கோரி பண்ருட்டி தொடர்ந்த வழக்கு-இன்று விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கட்சி தொடங்கியது முதலே தேமுதிக வேட்பாளர்கள் பெரும்பாலும் முரசு சின்னத்தில்தான் போட்டியிட்டு வந்தனர். கடந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சி முழுமையாக முரசு சின்னத்தில் போட்டியிட்டது.ஆனால் இது அவர்களுக்கான சின்னமே அல்ல, இந்த சின்னம் சுயேச்சை வேட்பாளர்களுக்கானது. தமிழகத்தில் இந்த சின்னத்தை விஜயகாந்த் கட்சிக்கு ஒதுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த தேர்தலின்போது தற்காலிகமாக உத்தரவிட்டதால் முரசு சின்னம் கிடைத்தது.

இந்த நிலையில் வருகிற சட்டசபைத் தேரத்லிலும் முரசு சின்னத்தில் போட்டியிட தேமுதிக ஆர்வமாக உள்ளது. எனவே முரசு சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி பண்ருட்டி ராமச்சந்திரன்,வழக்கு தொடர்ந்துள்ளார். அது இன்று விசாரணைக்கு வருகிறது.இந்த விசாரணைக்குப் பின்னர் முரசு, தேமுதிகவின் நிந்தர சின்னமாகுமா என்பது தெரிய வரும்.

English summary
DMDK's petition seeking to declare Murasu as party's permanant poll symbol to be taken for hearing today. Party presidium chairman Panruti Ramachandran has filed the case in SC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X