For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாய பதுங்கியிருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்-ஜவாஹிருல்லா

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குத் தருவதற்காகவும், தேர்தலின்போது செலவிடுவதற்காகவும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடோன்களில் திமுகவினர் பதுக்கி வைத்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நடவடிக்கைகள், பேச்சுக்கள், சட்டசபைத் தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்று அவர் விரும்புவதை காட்டுகிறது.

சமீபத்தில்,குண்டல்பட்டியில் கூட அதிரடி வாகன சோதனைகள் நடத்தி, பல லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர். தேர்தலை நடுநிலையாக நடத்த, தேர்தல் அதிகாரிகளின் பேச்சுக்கள், செயல் வடிவம் பெற வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில் திமுகவினர் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இது மத்திய, மாநில உளவுத் துறைகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த பணத்தைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர திமுக நினைக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர் இது குறித்து அதிரடி ஆய்வு நடத்தி, குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கைப்பற்ற வேண்டும். அப்போது தான், தேர்தல் கமிஷன் நினைக்கும் வகையில் தேர்தல் நடுநிலையாக நடக்கும் என்றார்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Manitha neya Makkal Katchi has asked EC to curb money power in TN assembly polls. Its president Prof jawahirullah has told that, DMK partymen have amaased thousand crores of rupees in godowns in all over Tamil Nadu to distribute to the voters. EC should stop this, he urged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X