For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் பாமகவுக்கான தொகுதிகள் முடிவாகும்-ஜி.கே.மணி

Google Oneindia Tamil News

G K Mani
சென்னை : சில தொகுதிகள் குறித்து மட்டுமே தற்போது பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் பாமகவுக்கான தொகுதிகள் முடிவாகும். தொகுதிப் பட்டியலை முதல்வர் கருணாநிதி விரைவில் வெளியிடுவார் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பாமகவுக்கு திமுக கூட்டணியில் 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் திமுகவும், பாமகவும் ஈடுபட்டுள்ளன. தற்போது இது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று பாமக தலைவர் ஜி.கே.மணி, ஆர்.வேலு, ஏ.கே.மூர்த்தி,வேல்முருகன் ஆகியோர் அடங்கிய பாமக குழு அறிவாலயம் வந்தது. அங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவை சந்தித்துப் பேசியது.

பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கூட்டணியில், நான்கைந்து கட்சிகள் இருப்பதால் ஒரே தொகுதியை அவை கேட்பதால் அதுகுறித்து தற்போது பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. விரைவில் அவை முடிவாகி தொகுதிப் பட்டியலை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்றார்.

ராமதாஸ் முன்னிலையில் நேர்காணல்

இந்த நிலையில் இன்று பாமக நேர்காணல் தொடங்கியது. கட்சிநிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர் தேர்வு நடந்தது. பிற்பகல் 12 மணிக்கு இது தொடங்கியது.

English summary
PMK constituency list will be released soon, says party leader G.K.Mani. He met DMK team today for constituency identification talks. After that he told the reporters that, talks are continuing. It will end soon. CM Karunanidhi will release the list, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X