For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரந்த வைப்பு, கடன்களுக்கு வட்டி வீதத்தை உயர்த்தியது எச்டிஎப்சி!

By Shankar
Google Oneindia Tamil News

HDFC Bank Logo
மும்பை: இந்த நிதி ஆண்டில் வங்கியில் பணத்தை பத்திரமாகப் போட்டு வைக்கும் முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ள முதல் நல்ல செய்தி இதுவாகத்தான் இருக்கும்: நிரந்தர வைப்புத் தொகைக்கு எச்டிஎப்சி வங்கியில் வட்டி வீதம் கணிசமாக, அதாவது 100 புள்ளிகள் (100 = 1 சதவீதம்) உயர்த்தப்பட்டுள்ளது!

ஒரு கெட்ட செய்தியும் உண்டு... இதே வங்கி தனது பல்வேறு கடன்களுக்கான வட்டி வீதத்தை 75 புள்ளிகள், அதாவது முக்கால் சதவீதம் உயர்த்தியுள்ளது!

கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கான கடன் வட்டி வீதமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கான வட்டி வீதத்தில் மட்டும் இன்னும் கை வைக்கவில்லை எச்டிஎப்சி.

எச்டிஎப்சியின் இப்போதைய வட்டிவீதங்கள்:

* நிரந்தர வைப்புத் தொகை: 9.25 சதவீதம் (45 நாட்களுக்கு மேல். இது மூத்தகுடிமக்களுக்கு 9.75 சதவீதம்)

* கடன்களுக்கான முதன்மை வட்டி வீதம்: 17.25 சதவீதம் (முன்பு 16.50)

* புதிய அடிப்படை வட்டி (base rate) வீதம் 8.20 (ஒரே மாதத்தில் இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது இந்த வட்டி வீதம்)

English summary
There's good news for those who keep their money in bank fixed deposits. From Monday, HDFC Bank will pay a higher interest rate for FDs of more than 45 days. The bad news, however, is that the leading private sector bank has decided to hike lending rates by up to 75 basis points.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X