For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறந்த பணியாளருக்கு 200 சதவீத போனஸ்: காக்னிஸன்ட் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Cognizant Logo
சென்னை: தனது நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 200 சதவீத போனஸ் அறிவித்துள்ளது முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிஸன்ட் நிறுவனம்.

தனது ஊழியர்களுக்கு 2010 டிசம்பர் 31-ம் தேதியோடு முடிந்த ஆண்டுக்கான போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி நிறுவனத்தின் தலைமை பணியாளர் அலுவலர் ஷங்கர் சீனிவாசன் கூறுகையில், "இந்த முறை பணியாளர்கள் வேலையில் காட்டிய திறமையின் அடிப்படையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பணியாளருக்கு 200 சதவீத போனஸ் வழங்கப்படும். சராசரியாகப் பார்க்கும்போது போனஸ் 165 சதவீதமாக கிடைக்கும்", என்றார்.

உலகம் முழுக்க 1.04 லட்சம் பணியாளர்கள் காக்னிஸன்டில் உள்ளனர். இவர்களில் 75 சதவீதத்தினர் இந்தியாவில் பணியாற்றுகின்றனர்.

உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்திலும் காக்னிஸன்ட் வருமானம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சாதனையைச் செய்த தனது பணியாளருக்கு போனஸை உயர்த்தியுள்ளது காக்னிஸன்ட்.

இதன்படி நிறுவனத்தின் சிஇஓ பிரான்சிஸ்கோ டிஸூஸா 816,968 டாலர்கள் இந்த ஆண்டு போனஸாகப் பெற்றுள்ளார். சிஎப்ஓ கார்டன் கோபர்ன் 735,286 டாலர்களும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (குளோபல் டெலிவரி) சந்திரசேகரனுக்கு 255,350 டாலர்களும் போனஸாகக் கிடைத்துள்ளன.

English summary
Cognizant, the tech major on Monday evening told its employees that its top performers would get 200% bonus payout for the year ended December 2010, while the average bonus payout would be 165% for the year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X