For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விற்பனையை உயர்த்த டீலர்களை அதிகரிக்கும் வோக்ஸ்வேகன்

Google Oneindia Tamil News

Volkswagen
ஜெனிவா: விற்பனையை அதிகரிக்கும் வகையில் டீலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியை வோக்ஸவேகன் நிறுவனம் இந்திய கார் விற்பனை சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. விற்பனையை மேலும் உயர்த்துவதற்கு வோக்ஸ்வேகன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சேவை கிடைக்கும் விதத்தில் டீலர் எண்ணிக்கையை அதிகரிக்க வோக்ஸ்வேகன் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

"இந்தியாவில் ஸ்கோடா,ஆடி,வோக்ஸ்வேகன் ஆகிய மூன்று பிராண்டுகளில் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். இருந்தாலும், அனைத்து நிறுவனங்களும் தனித்தனி நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. வோக்ஸ்வேகனின் விற்பனை அதிகரித்து வருவதால் டீலர்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

நாடு முழுவதும் தற்போது 120 டீலர்கள் உள்ளனர். இதுதவிர, வோக்ஸ்வேகன் சேவை நேரடியாக கிடைக்கும் வகையில் புதிய நகரங்களில் டீலர்கள் நியமிக்கப்படுவார்கள். இதன்மூலம், விற்பனையும் உயரும்.

மேலும், வரும் செப்டம்பர் மாதத்தில் சிறிய காரை அறிமுகம் செய்ய உள்ளோம். விலை குறைவான இந்த கார் இந்திய சந்தையின் தேவைக்கு கச்சிதமாக பொருந்தும்," என்று கூறினார்.

English summary
The German car maker Volkswagen is likely to expand its dealer network in the Indian market to reach the unreached. This will add to the company’s strategy to launch new products and domestic manufacturing, said the company’s Member of Supervisory Board of Management.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X