For Daily Alerts
Just In
திருப்புவனம் அருகே இரு பிரிவினருக்கிடையே கலவரம்-2 பேர் படுகொலை
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே பெரும் மோதல் மூண்டது. இதில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
திருப்புவனம் அருகே உள்ள கிராமம் கொந்தகை. அங்கு இரு பிரிவினருக்கு இடையே இன்று கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இதில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அங்குள்ள நெல் கிட்டங்கி ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் கொந்தகை கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். கூடுதல் போலீஸாரும் விரைந்துள்ளனர்.
எதற்காக இந்த மோதல் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!