For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு உலைகளை குளிரூட்டும் பணியைத் தொடரும் ஜப்பான்: போராடும் அதிகாரிகள்

Google Oneindia Tamil News

Japan Nuke Plants
ஒசாகா: வெடித்த அணு உலைகளை குளிரூட்டும் முயற்சியை சில மணி நேர இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் துவங்கியுள்ளது ஜப்பான்.

இது குறித்து அணு உலை பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது,

பழுதடைந்த ஃபுகுஷிமா அணு உலையின் நான்காவது உலையை குளூரூட்டும் முயற்சியில் தற்காப்பு படையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இன்று காலை 9 மணி முதல் இந்த வண்டிகள் தண்ணீரைப் பீச்சி உலையை குளிர வைத்துக் கொண்டிருக்கின்றன.

டோக்கியோ தீயணைப்புத் துறை மூன்றாவது உலையை 13 மணி நேரமாக குளிர வைத்த பணியை இன்று அதிகாலை 3.40 மணியுடன் நிறுத்தியது. தனது பணியை இன்று மீண்டும் தொடரும்.

நேற்று 3 ஆளில்லா வாகன்ஙகளின் மூலம் தீயணைப்பு வீரர்கள் சுமர் 2 ஆயிரம் டன் தண்ணீரை பாய்ச்சி உலையை குளிர வைத்து மக்களை கதிர்வீச்சில் இருந்து காப்பாற்ற முயன்றனர் என்றார்.

நாங்கள் இன்றும் எங்கள் பணியைத் தொடர்வோம். இந்த குளிரூட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எந்த தீயணைப்பு வீரர்களும் அதிக அளவு கதிர்வீச்சுக்கு ஆளாகவில்லை என்று டோக்கியோ தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கசுயா குவாசுகா தெரிவித்தார்.

கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் வெடித்த நான்கு உலைகளில் இதுவும் ஒன்று. இது தலைநகர் டோக்கியோவில் இருந்து 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த இரட்டை பேரழிவுகளால் 4 அணு உலைகள் வெடித்தன. உலைகளின் உள்ளே இருக்கும் எரிபொருள் ராட்களை தண்ணீரில் வைப்பதற்கு அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்த ராட்களில் காற்று பட்டால் இதில் இருந்து ஆபத்தான கதிர்வீச்சு பொருட்கள் அதிக அளவில் வெளியாகும்.

உலைகளின் குளிரூட்டும் முறைக்கு மின்சாரத்தை மீண்டும் கொண்டு வர பொறியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு மின்சாரம் கொடுக்கப்பட்ட பிறகும் அவை சீராக செயல்படுமா என்பது சந்தேகமே.

English summary
Japan has resumed its effort to cool down the ruined nuclear plant today after several hours of break. Self-defence forces' fire trucks have been trying to douse the fourth reactor from 9 am. The Tokyo fire department was dousing the third reactor for 13 hours which ended at 3.40 am. It will resume its work today also. Authorities are trying their level best to douse the reactors to minimise the level of radiation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X