For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்தின் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிட்டல் மீண்டும் நம்பர் 1

Google Oneindia Tamil News

Lakshmi Mittal
லண்டன்: இங்கிலாந்திலேயே மிகப் பெரிய ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்தியர் லட்சுமி மிட்டல். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் மிகப் பெரிய ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலை ஈஸ்டர்ன் ஐ என்ற வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் பவுண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 1.5 பில்லியன் பவுண்டுகள் குறைவாகும்.

2வது இடத்தைப் பிடித்துள்ள இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த், கோபி, பிரகாஷ், அசோக் ஆகியோரின் சொத்து மதிப்பு 9 பில்லியன் பவுண்டுகளாகும். இது கடந்த ஆண்டை விட 1 பில்லியன் பவுண்டு அதிகமாகும். தங்க வியாபாரம், எண்ணெய், மின்சாரம், போக்குவரத்து, ஐடி, வங்கித்துறை என பல துறைகளில் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் 4.5 பில்லியன் பவுண்டுகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்வராஜ் பால் இந்தப் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 600 மில்லியன் பவுண்டுகளாகும்.

English summary
NRI steel tycoon Lakshmi Mittal has retained his top position as the richest Asian in the UK. Mittal and his family's wealth stood at 15.5 billion pounds. The Hinduja brothers - Srichand, Gopi, Prakash and Ashok, who have global business in many sectors, including oil, power, transport, IT and banking, have a wealth of 9 billion pounds. Industrialist Lord Swraj Paul is listed sixth in the list with wealth worth 600 million pounds, 90 million pounds more than last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X