For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தயவு செய்து அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்-கார்த்திக் கோரிக்கை

Google Oneindia Tamil News

Karthik
சென்னை : பொதுமக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து யாரும் அதிமுகவுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.

அதிமுக கூட்டணியில் சேருவதாக இருந்து பின்னர் அங்கு சத்தம் போடாமல் வெளியே விரட்டி விடப்பட்டவர் கார்த்திக். தான் வெளியேற்றப்பட்டு விட்டோம் என்பதைக் கூட உணராமல் முதலில் தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவே பேசி வந்தார் கார்த்திக். பின்னர்தான் அதை லேட்டாக உணர்ந்து வேகமாக வெளியேறி வந்தார்.

வெளியில் வந்தது முதல் தொடர்ந்து ஜெயலலிதாவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இவரது கட்சி 30 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் மற்றவர்களை ஆதரிக்கப் போகிறாராம் கார்த்திக். அது யார் என்பதை விரைவில் சொல்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை கூலிங் கிளாஸ் மற்றும் ஆங்கில உரையாடல் சகிதம் சந்தித்தார் கார்த்திக்.

அவர் பேசுகையில், நான் இன்னும் அந்த லேடி (ஜெயலலிதா) மீது மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவரைச் சுற்றி உள்ளவர்கள், இந்த சுப்பிரமணிய சாமி போன்றவர்கள், யாருமே சரியில்லைங்க. அனைவரும் சுயநலவாதிகள்.

நான் பொதுமக்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் பொதுத் தேர்தலில் தயவு செய்து யாரும் அவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க. ப்ளீஸ் டோன்ட் வோட் ஃபார் தெம்.

160 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றார் கார்த்திக்.

English summary
Naadalum Makkal katchi leader Actor Karthik has asked the people of TN not to vote for ADMK. He said to the reporters that, I appeal the people of TN, Please dont vote for ADMK. The party will be defeated in coming polls. All are execpt Jayalalitha are selfish, particularly Subramaniyam Swamy. he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X