For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 12 தொகுதிகளில் வி.சி. தனித்துப் போட்டி- வேட்பாளர்கள் அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Tirumavalavan
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 12 இடங்களில் போட்டியிடும் அக் கட்சி வேட்பாளர்களின் விவரத்தை அதன் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

இங்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடவுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்று 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்து தேர்தலைச் சந்திக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்பியிருந்த நிலையில் அதற்கான சூழல் ஏதுவாக அமையவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நெருக்கடியான நிலையில் புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக்குழு என் தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியது.

இக்கூட்டத்தில் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம் பின் வருமாறு:


1. வில்லியனூர்- த.வே. அங்காளன் என்கிற த.வே. பொழிலன்

2. உசுடு- பெரு.அரிமாத் தமிழன் என்கிற அரியபுத்ரி

3. உழவர்கரை- செல்வ.நந்தன் என்கிற நடராஜன்

4. மணவெளி- ப.இளவரசன் என்கிற ராஜ்குமார்

5. ஏம்பலம்- தமிழ்வளவன் என்கிற ராஜேந்திரன்

6. திருபுவனை- அ.கா.விடுதலைச் செல்வன் என்கிற பத்மநாபன்

7. மண்ணாடிபட்டு- பூபாலன்

8. நெட்டப்பாக்கம்- பொன்.நா.சிவந்தவன்

9. நிரவி திருப்பட்டினம்- ந.கு.செல்வசுந்தரம்

10. நெடுங்காடு- வீ.தமிழரசி

11. திருநள்ளார்- தம்பி தேவேந்திரன்

12. உப்பளம்- திருக்குமரன்

English summary
Viduthalai Siruthaigal party has released its 12 candidates list today for Puducherry assembly polls. DMK and congress have formed alliance in this state, but VCK is going alone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X