For Daily Alerts
Just In
நாயகனும், நாயகியும் சேர்ந்து தயாராகும் சூப்பர்ஹிட் படம்-அமைச்சர் பூங்கோதை பேச்சு
ஆலங்குளம்: கதாநாயகனும், கதாநாயகியும் சேர்ந்து சூப்பர்ஹிட் படம் தயாராகிறது என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம் சட்டசபை தொகுதி மற்றும் கூட்டணி கட்சிகளி்ன் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் பூங்கோதை பேசியதாவது,
கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக அமைந்தது. அதில் கூறப்பட்டவைகளை விட அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த முறை தேர்தல் அறிக்கையை கதாநாயகிக்கு ஒப்பாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கதாநாயகனும், கதாநாயகியும் சேர்ந்து சூப்பர்ஹிட் படம் தயாராகிறது. எனவே மீண்டும் கருணாநிதி தலைமையில் சிறந்த அரசு அமையும்.
நாம் வீட்டுக்கு வீடு செனறு நேரடியாக வாக்குகளை திரட்ட வேண்டும். திமுக அரசி்ன் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றாலே எளிதாக வெற்றி பெறலாம் என்றார்.