For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள முதல்வரிடம் சொத்தே இல்லை: கையிருப்பு ரூ. 3ஆயிரம்!

Google Oneindia Tamil News

Achuthanandan
பாலக்காடு: கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் அசையும், அசையா என எந்த சொத்தும் இல்லை. கையிருப்பாக ரூ. 3000 மட்டுமே வைத்துள்ளாராம்.

கேரள முதல்வர் அச்சுதானந்தன்(87) வேட்பு மனு தாக்கலின்போது வேட்பு மனுவுடன் சேர்த்து சொத்துக் கணக்கு விவரத்தையும் சமர்பித்துள்ளார். வரும் தேர்தலில் அவர் மலம்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கையில் ரூ. 3 ஆயிரமும், வங்கி சேமிப்பில் ரூ. 80 ஆயிரத்து 295 உள்ளதாம். கடந்த 2009-10-ம் ஆண்டிற்கான வரிமான வரி செலுத்தியதின்படி அவரது வருமானம் ரூ. 3 லட்சத்து 43 ஆயிரத்து 994.

அரசு ஓய்வூதியம் பெறும் அச்சுதானந்தன் மனைவி வசுமதி கடந்த 1982-ம் ஆண்டு ரூ. 18 ஆயிரம் கொடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பரவூரில் 10 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். தற்போது அதன் மதிப்பு ரூ. 1 லட்சம். மேலும் அவரிடம் ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 100 கிராம் தங்க நகைகள் இருக்கிறது.

வசுமதியின் கையிருப்பில் ரூ. 10 ஆயிரமும், வங்கி சேமிப்பில் ரூ. 5 லட்சத்து 70 ஆயிரத்து 635-ம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் கைரலி தொலைக்காட்சியை நடத்தும் மலையாளம் கம்யூனிகேஷன்ஸில் ரூ. 5 ஆயிரத்திற்கு பங்குகளும் உள்ளன.

English summary
Veteran CPI(M) leader and Kerala CM Achuthananthan has no moving or non moving assets according to the affidavit filed by him as part of his election nomination papers. He has Rs. 3,000 in hand and Rs. 80,295 as bank deposits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X