For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்ரிக்க நாடுகளில் சேவையை விரிவுபடுத்தும் இன்போஸிஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

Infosys
பெங்களூர்: இன்போஸிஸ் நிறுவனம் ஆப்ரிக்க நாடுகளில் தனது சேவையை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

இப்போது ஆப்ரிக்காவில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும், அதுவும் வங்கித் துறை சார்ந்த பணிகளை இன்போஸிஸ் மேற்கொண்டுள்ளது.

ஆனால், இனி வரும் நாட்களில் ஆப்ரிக்க பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை அதிக அளவு ஈர்க்கும் வகையில் கிளைகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்போஸிஸ் சிஎப்ஓ பாலகிருஷ்ணன் கூறுகையில், "ஆப்ரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதனை இன்போஸிஸ் புரிந்து கொண்டுள்ளது.

வங்கித் துறைதவிர, மற்ற துறைகள் சார்ந்த வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் சேவையை விரிவு படுத்தப் போகிறோம். இதற்காக ஆப்ரிக்க நாடுகளில் மார்க்கெட்டிங் அலுவலகம் ஒன்றும் திறக்கப்படும்" என்றார்.

English summary
Infosys Technologies is planning to open more offices for IT services in the African continent. Currently the company's offerings in Africa are limited to the banking solutions product Finacle. The company is now laying the groundwork to expand its offerings to include Infosys's various offshore IT services that it offers in larger markets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X