For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஊழலுக்கு எதிராக' வாக்கு: பெண்கள் முன்னணி!

By Shankar
Google Oneindia Tamil News

கரூர்: ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் இடதுசாரி கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக பெண்கள் முன்னணி மாநில பொதுசெயலாளர் கிறிஸ்டினா கூறினார்.

பெண்கள் முன்னணி தேர்தல் நிலைபாடு குறித்து கரூரில் நடந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன் பிறகு பெண்கள் முன்னணி மாநில பொதுசெயலாளர் கிறிஸ்டினா செய்தியாளர்களிடம் கூறியதாவது

கடந்த 2009 லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பெண்கள் முன்னணி போட்டியிட்டது. தேர்தல் முறைகேடு, ஓட்டுபதிவு இயந்திர முறைகேடு போன்ற பல்வேறு விவகாரம் காரணமாக வெற்றி வாய்ப்பு பறிபோனது.

வரும் சட்டசபை தேர்தலில், வாக்காளருக்கு பணம் கொடுத்தல், மிரட்டில், ஓட்டு பதிவு இயந்திரத்தில் முறைகேடு ஆகியவற்றுக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

தற்போதைய அரசியல் சூழலில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் இடதுசாரி கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம், என்றார்.

இடதுசாரி கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Women Front, one of the popular forum for women community has decided to support Left parties and allies in forthcoming Assembly elections of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X