For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழிலாளர்களுக்கு ரூ.1.07 லட்சம் போனஸ்: போர்ச்சே அறிவிப்பு

Google Oneindia Tamil News

Porsche
நிறுவனத்தின் வருவாய் கணிசமாக உயர்ந்ததால், தொழிலாளர்களுக்கு 1700 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1.07 லட்சம்) ஊக்கஊதியமாக வழங்கப்படும் என்று போர்ச்சே கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

உயர்ரக சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற போர்ச்சே ஆட்டோ நிறுவனம் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்-டிசம்பர் இடையிலான குறுகிய கால நிதியாண்டில் போர்ச்சே ஆட்டோவின் வருவாய் கணிசமாக உயர்ந்தது.

இதனால், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன போர்ச்சே நிர்வாகம், வருவாய் உயர்வுக்காக உழைத்த தொழிலாளர்களை குஷிபடுத்த போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, போர்ச்சே ஆட்டோ மனிதவள மேம்பாட்டு துறை துணைத்தலைவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆகஸ்ட்-டிசம்பர் இடையிலான குறுகிய நிதியாண்டு காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 688 மில்லியன் யூரோவாக பதிவானது. மொத்த விற்பனை வர்த்தகத்தில் 17.8 சதவீதம் நிகர லாபமாக கிடைத்தது

இதையடுத்து, தொழிலாளர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது. வருவாய் உயர்வுக்காக கடுமையாக உழைத்த தொழிலாளர்களை ஊக்குவி்க்கும் விதமாக 1,700 யூரோ போனஸ் வழங்க போர்ச்சே இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த அனைவருக்கும் இந்த போனஸ் கிடைக்கும். ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்து இந்த போனஸ் வழங்கப்படும். இதன்மூலம், 8,000 தொழிலாளர்கள் பயன்பெறுவர்," என்று தெரிவித்தார்.

English summary
There has been a fantastic gesture from Porsche AG, Stuttgart as it is paying its employees a special incentive of 1700 Euros. This comes as a token of appreciation for the efforts mooted in the curtailed Financial year (August to December 2010).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X