For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஎச்சிஎல் லாபம் கிடுகிடு உயர்வு!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் மிகு மின் நிறுவனம் (பிஎச்சிஎல்) இந்த நிதியாண்டில் 40 சதவீத லாப உயர்வைப் பெற்றுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ 4311 கோடியாக இருந்த இந்நிறுவன நிகர லாபம் இந்த ஆண்டு ரூ 6021 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலான் இயக்குநர் பிரசாத ராவ் கூறுகையில், "இந்த ஆண்டும் பிஎச்இஎல்லுக்கு மிகவும் வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. உற்பத்திச் செலவைக் குறை்க நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல பலன் தந்தன. நிறுவனத்தின் வருமானம் ரூ 43451 கோடியாக உயர்ந்துள்ளது (முந்தைய ஆண்டு ரூ 34154). இது 27 சதவீதம் அதிகமாகும்..." என்றார்.

கடந்த நிதியாண்டில் ஏமன் மற்றும் கென்யாவில் கால்பதித்த பிஎச்இஎல், இந்த ஆண்டு ஹாங்காங் மற்றும் துருக்கிக்கு மின் மோட்டார்கள் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ 60507 கோடிக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இந்த ஆண்டும் அதே அளவுக்கு ஆர்டர்கள் குவியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது பிஎச்இஎல்.

English summary
Bharat Heavy Electrical Limited (BHEL) on Monday announced a record 40 per cent rise in net profit at Rs.6,021 crore in 2010-11 against Rs. 4,311 crore previously.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X