For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருநாழியில் டீக்கடையில் ரூ. 40 லட்சம் பறிமுதல்: கடை உரிமையாளர் கைது

By Siva
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் உள்ள ஒரு டீக்கடையில் இருந்து ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம், காவல் துறையுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு டீக்கடையில் இருந்து தேர்தல் அதிகாரிகள் ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் கமுதி அருகே உள்ளது பெருநாழி கிராமம். இந்த கிராமத்தில் பாண்டி என்பவர் வீட்டு டீக்கடையில் ரூ 40 லட்சம் ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகிசிய தகவல் கிடைத்து.

இதனையடுத்து,தேர்தல் பிரிவு பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டீம் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தின ர்.

அப்போது அங்கு ரூ 40 லட்சம் ரொக்கப்பணம் பதுக்கி வைத்திருந்து கண்டுபடிக்கப்பட்டது. ஆனால், அந்த பணத்திற்கான ஆதராம் அவரிடம் இல்லை.
இதையடு‌த்து காவ‌ல்துறை‌‌‌யின‌‌ரிட‌ம் அந்த பண‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டது.

டீ‌‌க்கடை‌க்கா‌ரரிடம் விசாரித்ததில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அந்த பணத்தை வைத்திருந்ததாகக் கூறினார்.

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கணக்கில் காட்டப்படாத ரூ. 37 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் ஆணையத்தின் பற்க்கும் படைகள் தமிழகம் முழுவதும் நடத்திய சோதனைகளில் இதுவரை கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளன.

ஆ‌ம்‌னி பேரு‌ந்‌தி‌ல் ரூ 5 கோடியே 11 ல‌ட்ச‌ம் பறிமுதல்

திரு‌ச்‌சி‌யி‌ல் த‌‌னியா‌ர் ஆ‌ம்‌னி பேரு‌ந்‌தி‌ல் இரு‌ந்து ரூ 5 கோடியே 11 ல‌ட்ச‌த்தை தே‌‌ர்த‌ல் அ‌திகா‌ரிக‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

‌திரு‌ச்‌சி பொ‌ன்நக‌ர் ‌வீ‌தியில் உள்ள ஒரு சினிமா திரையர‌ங்க‌ம் அருகே பண‌ம் கட‌த்‌த‌ப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரக்சிய தகவல் கிடைத்து.

இதனையடுத்து, வருவாய் கோ‌ட்டா‌ச்‌சிய‌ர் ச‌ங்‌கீதா தலைமை‌‌யி‌ல் அ‌திகா‌ரிக‌ள் ந‌ள்‌ளிரவு 2 ம‌ணி‌க்கு அ‌ங்கு ‌விரை‌ந்து செ‌ன்று திடீர் சோதனை நட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது ஆ‌ம்‌னி பேரு‌ந்‌தி‌ன் மே‌ற்கூரை‌யி‌ல் உ‌ள்ள 5 பைக‌ளி‌ல் 1000 ரூபா‌ய் நோ‌ட்டு‌க்க‌ட்டுக‌ள் இரு‌‌ந்துத. இதில், மொ‌த்த‌ம் 5 கோடியே 11 ல‌ட்ச‌த்து 27 ஆ‌யிர‌‌‌ம் ரூபா‌ய்‌ கண்டுபடிக்கப்பட்டது. இதற்கான உ‌ரிய ஆவண‌ம் இ‌ல்லாததா‌ல் பண‌த்தையு‌ம், பேரு‌ந்தையு‌ம் அ‌திகா‌ரிகள‌் ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

இ‌ந்த பண‌ம் வருமான வ‌ரி‌த்துறை‌யிட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது . இந்த பண‌ம் யாருடையது எ‌ன்பது கு‌றி‌த்து ‌விசாரணை நட‌ந்து வருகின்றது.

வாகன சோதனை‌யி‌ல் ஒரே நேர‌த்‌தி‌ல் 5 கோடி ரூபா‌ய்‌க்கு மே‌ல் பண‌ம் கை‌ப்ப‌ற்ற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது இதுவே முத‌ன் முறை என்பது குறிப்பிடதக்கது.

English summary
Election officers and police officers have confiscated Rs. 40 lakh from a teashop in Perunali, Ramnad district yesterday. They have arrested the shop owner Ponnuswamy who told that he kept the money to distribute to voters on behalf of DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X