For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை கிலானி மகனுக்கு கல்லீரல் ஆபரேஷன்: லண்டன் கிளம்பினார்

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானியின் மகனுக்கு நாளை லண்டனில் கல்லீரல் அறுவை சிகிச்சை நடக்கிறது. இதனால் மகனுடன் இருப்பதற்காக 4 நாள் பயணமாக இன்று லண்டன் கிளம்பினார் கிலானி.

கிலானியின் மகன் ஹைதரின் கல்லீரலில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து நாளை லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.

மகனுடன் இருப்பதற்காக கிலானி இன்று பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டார். அவர் லண்டனில் 4 நாட்கள் தங்கியிருப்பார். அப்போது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபை சந்தித்து நலம் விசாரிக்கிறார்.

இது தவிர அவர் முத்தாஹிதா குவாமி அமைப்பின் தலைவர் அல்தாப் ஹுசைனை சந்தித்து பேசுகிறார்.

English summary
Pakistan premier Yousuf Raza Gilani's son Hyder is to undergo liver surgery tomorrow at King's hospital in London. Gilani has left for London to be with his ailing son. He will be there for 4 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X