For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையம் முற்றிலும் நடுநிலையானது: தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி

By Siva
Google Oneindia Tamil News

Qureshi
டெல்லி: தேர்தல் ஆணையம் முற்றிலும் நடுநிலையாகத் தான் செயல்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார்.

திமுக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அதன் செயல்பாடுகள் அவசரகால நடவடிக்கைகள் போன்று இருப்பதாகவும் புகார் தெரிவித்தன. மேலும், இதே போன்று புகார் மேற்கு வங்கத்திலும் எழுந்தது.

இந்த புகார்களை குரேஷி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தான் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அது யார் பேச்சைக் கேட்டும் செயல்படுவதில்லை.

தமிழ்நாடு சவாலான இடம். அதற்காக அங்கு நடக்கும் முறைகேடுகளைப் பார்த்தும் பார்க்காமல் இருக்க முடியாது என்று ஏற்கனவே குரேஷி தெரிவித்திருந்தார்.

இதற்கு முதல்வர் கருணாநிதி கூறுகையில், ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் ஆணையம் பாராபட்சத்துடன் தான் நடக்கிறது என்றார்.

English summary
Chief election commissioner SY Qureshi has told that EC is acting on its own and not biased. EC dismisses DMK, PMK and some WB political leaders charge that it is biased.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X