For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதிக் பாட்சா தற்கொலை வழக்கில் உறவினர்களிடம் விசாரணை

By Chakra
Google Oneindia Tamil News

Sadiq Batcha
சென்னை: சாதிக் பாட்சா உறவினர்களிடம் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தினர்.

2ஜி விவகாரத்தில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சாதிக் பாட்சா இறந்த சூழல், அவரை யாராவது தற்கொலை செய்யத் தூண்டினார்களா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் மத்திய தடயவியல் நிபுணர் குழுவினர் சாதிக் பாட்சாவின் சென்னை வீட்டில் சோதனை நடத்தினர்.

அதே சமயத்தில் திருச்சி, பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்சாவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

சாதிக் பாட்சா தூக்கு போட்டுக் கொண்ட அறைக் கதவை உடைத்து திறந்ததாக அவரது மனைவி தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில அந்த கதவு உடைக்கப்படவேயில்லை என்பதை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. மேலும், சாதிக் பாட்சா இறப்பதற்கு முன்தினம் இரவு ஒரு குறிப்பிட்ட நபரிடம் 30 தடவைக்கும் அதிகமாக பேசியுள்ளார். அந்த நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

சாதிக் பாட்சா தற்கொலை குறித்து அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் மற்றும் அறிவியல் பூர்வமாக நடந்துள்ள ஆய்வுகள், சிபிஐ சோதனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

English summary
Forensic experts have conducted tests to find out the truth in Sadiq Batcha's suicide case. CBI is questioning his relatives and friends as they suspect that there is something fishy in his suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X