For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணவீக்கத்துக்கு பலியாகும் இந்திய பொருளாதார வளர்ச்சி! - ஐஎம்எப் எச்சரிக்கை

By Shankar
Google Oneindia Tamil News

IMF
டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி வீதம் இரட்டை இலக்கத்துக்கு போவது சாத்தியமில்லை என்றும், 8.2 சதவீதம் அளவுக்குதான் இந்த ஆண்டு இருக்கும் என்றும் ஐஎம்எப் அறிவித்துள்ளது.

2011-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.4 சதவீத இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது சீனாவைவிட (10.3) வேகமான வளர்ச்சி என்பதால் பொருளியல் வல்லுநர்கள் மிகுந்த திருப்தியுடன் இருந்தனர்.

ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதி அமைப்பு கூறியுள்ளது.

உலகப் பொருளாதாரம் குறித்த தனது ஆண்டறிக்கையில் அந்த அமைப்பு கூறியுள்ளதாவது:

"இந்தியாவில் இந்த ஆண்டு மந்தமான பொருளாதார வளர்ச்சிதான் இருக்கும். காரணம், பணவீக்கம் மற்றும் மந்தமான உற்பத்தி. இந்த இரண்டும்தான் பொருளாதாரத்தை பின்னுக்கு இழுப்பவை. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க பலமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடன் அளவு மட்டும் இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாகும்.

2012-ம் ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகும் சூழல் உள்ளது. இப்போதைய நிலைமைகள் தொடர்ந்தால் 2012-ல் 7.75 வீத வளர்ச்சிதான் சாத்தியமாகும்," என்று எச்சரித்துள்ளது ஐஎம்எப்.

சீனாவின் வளர்ச்சியும் எதிர்ப்பார்த்த அளவுக்கு இருக்காது என்றும், 140 புள்ளிகள் குறையும் (1.4 சதவீதம்) என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

English summary
The International Monetary Fund is no longer so bullish on India's economic growth. On Monday, it lowered the growth projection for 2011 to 8.2%, as against 10.4% for 2010 when India was projected to be the fastest growing major economy ahead of China's 10.3%. India's growth rate is expected to moderate further to 7.75% in 2012, IMF said in its April 2011 World Economic Outlook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X