For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெஸ்ட்சைடு்அங்காடிகளில் நானோ விற்பனையை மீண்டும் துவங்க டாடா முடிவு

Google Oneindia Tamil News

Tata Nano
மும்பை: பிக்பஜாரை தொடர்ந்து, வெஸ்ட்சைட் சில்லறை விற்பனை மையங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு அஸ்திரங்களை பயன்படுத்தி நானோ காரின் விற்பனையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டீலர்கள் தவிர, பிக்பஜார் வணிக வளாகங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். இதற்காக, பியூச்சர் குழுமத்துடன் அண்மையில் டாடா ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், பிக்பஜாரில் நானோ காரை தவிர, பிற நிறுவனங்களின் கார்களை விற்பனை செய்ய பியூச்சர் குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் டிரென்ட் நிறுவனத்து்க்கு சொந்தமான வெஸ்ட்சைடு சில்லறை விற்பனை மையங்கள் மூலம் நானோ காரை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வெஸ்ட்சைடு நிறுவனத்தின் சிஓஓ கவுரவ் மகாஜன் கூறுகையில்,"நாங்கள் ஏற்கனவே நானோ காரை விற்பனை செய்து வந்தோம். ஆனால், இடையில் நானோ கார் விற்பனையை நிறுத்தினோம். இந்நிலையில், மீண்டும் நானோ காரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கான, புக்கிங்கும் துவங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள வெஸ்ட்சைடு மையங்களில் நானோ கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது,"என்றார்.

English summary
Tata-owned Westside stores that is likely to start selling the small car, again and considering Nano bookings did begin at Westside initially, when the car was displayed on the shop floors, it is now reconsidering initiating sales since competitor Big Bazaar has also got the mandate to sell the car.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X