For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி 10 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்பெக்ட்ரம் உரிமம்!! - கபில் சிபல்

Google Oneindia Tamil News

டெல்லி: முறைகேடுகளைத் தடுக்க இனி ஸ்பெக்ட்ரம் உரிமத்தின் தவணைக் காலம் 20 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததையொட்டி தொலை தொடர்பு கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு லைசென்ஸ் இதுவரை 20 வருடங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது 10 ஆண்டாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. லைசென்சை புதுப்பிக்கும் போது, அப்போதுள்ள சந்தை மதிப்புக்கேற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரமை பயன்படுத்தாமல் வைத்திருக்க கூடாது. அவர்கள் அதை பயன் படுத்துகிறார்களா? முறையான செயல்பாடுகள் இருக்கின்றனவா? என தொலை தொடர்பு துறை அவ்வப்போது ஆய்வு செய்யும்.

இதில் தவறு ஏதும் நடந்தால் ஒதுக்கீடு திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும். நாடு முழுவதும் லைசென்சுக்கு ஒரே கட்டண முறை கொண்டுவரப்படும். டெலிபோன் நிறுவனங்கள் இணைப்பு, விலைக்கு வாங்குதல் போன்றவற்றுக்கான நடைமுறை எளிமையாக்கப்படும்," என்றார்.

English summary
Union Telecom minister Kapil Sibal on Monday told that there is discussion about existing operators being allowed to extend their licences for 10 years instead of 20 years now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X