For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்முலா ஒன் அணிக்கு இந்திய டிரைவரை நியமிக்க மல்லையா தீவிரம்

Google Oneindia Tamil News

Vijay Mallya
பெங்களுர்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது ஃபோர்ஸ் இண்டியா எப்-1 கார் பந்தய அகாடமி மூலம், தனது அணிக்கு புதிய இந்திய டிரைவரை தேடும் படலத்தை விரைவில துவங்குகிறார்.

கர்நாடகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, ஃபோர்ஸ் இண்டியா எப்-1 என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார். பார்முலா ஒன் பந்தயங்களில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற பெருமையை பெற்றது மல்லையாவின் ஃபோர்ஸ் இண்டியா எப்-1 அணி.

இந்த நிலையில், ஃபோர்ஸ் இண்டியா எப்-1 அணியில் இளம் இந்திய கார் பந்தய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதத்தில், நாடு முழுவதும் 'ஒன் ப்ரம் பில்லியன்' என்ற பெயரில் பிரம்மாண்ட டிரைவர் தேடும் படலத்தை நடத்துகிறது போர்ஸ் இண்டியா எப்-1 அகாடமி.

உலகின் பிரபல ஆயில் தயாரிப்பு நிறுவனமான எக்ஸான் லூப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஃபோர்ஸ் இண்டியா எப்-1 அகாடமி இந்த டிரைவர் தேடும் படலத்தை நடத்துகிறது. வரும் 25ந் தேதி மற்றும் ஜூன் 7ந் தேதி சென்னை, பெங்களுர், அமிர்தசரஸ், கோவா, ஐதராபாத், கோல்ஹாப்பூர் மற்றும் மும்பை உள்ளிட்ட ஏழு நகரங்களில் 14 முதல் 17 வயதுக்குட்ப்பட்ட இளம் டிரைவர்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் முதல்கட்டமாக 100 இளம் டிரைவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர். பின்னர், செப்டம்பர் மாதம் நடைபெறும் இறுதிகட்ட தேர்வில் 14 டிரைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்பின் தேசிய அளவில் நடைபெறும் தேர்வில், முதல் பத்து இடத்தை பிடிக்கும் டிரைவர்கள், பார்முலா ஒன் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பயிற்சியை பெறுவதற்காக பிரிட்டன் அனுப்பப்பட உள்ளனர்.

சில்வர்ஸ்டோன் நகரில் உள்ள டிமேக்ஸ் கார்ட்ஸ் பார்முலா ஒன் கார் டிரைவிங் பயிற்சிப் பள்ளியில் பத்து பேருக்கும், கார் ஓட்டுவது மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து செயல்முறை மற்றும் கற்றல் வழி பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

அதன்பிறகு நடைபெறும், தேர்வில் முதலிடத்தை பிடிக்கும் டிரைவருக்கு வரும் அக்டோபர் மாதம் டெல்லி அருகே நொய்டாவில் நடைபெற உள்ள இந்தியாவின் முதல் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பங்கு பெறும் அரிய வாய்ப்பை பெறுவார். அடுத்த இரண்டு இடங்களை பிடிக்கும் டிரைவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு பார்முலா ஒன் கார் பந்தயங்களில் பங்கேற்கும் வாய்ப்பை பெற உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா கூறுகையில்,"இந்திய டிரைவர்கள் சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்க அடித்தளம் அமைத்து கொடுக்கும் வகையில் இந்த போட்டி தேர்வு நடக்கிறது. இது நிச்சயம் இந்திய திறமைசாலிகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும்," என்றார்.

English summary
Business tycoon Vijay Mallya is on a hunt for an Indian driver to compete in the Formula 1 (F1) motor sport racing world championship through his Force India F1 Team Academy, a not-for-profit entity
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X