For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்போஸிஸ்: பங்குதாரர்களுக்கு ரூ 20 டிவிடெண்ட்

Google Oneindia Tamil News

மும்பை: இன்போஸிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 1814 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 14 சதவீதம் அதிகம் என்றாலும், சந்தையில் கணிக்கப்பட்டதை விட குறைவுதான் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இன்போஸிஸ் பங்குதாரர்களுக்கு பங்கொன்றுக்கு ரூ 20 டிவிடெண்ட் அறிவித்துள்ளது இன்போஸிஸ்.

மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இன்போஸிஸ் லாபம் ரூ 1839.40 கோடியிலிருந்து ரூ 1899.20 கோடியாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர்.

நிறுவனத்தின் சாப்ட்வேர் பணிகள் மற்றும் உற்பத்தி மூலம் கிடைத்த வருவாய் இந்த காலாண்டில் ரூ 7250 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ 5944 ஆக இருந்தது. இந்த நிதியாண்டைப் பொறுத்தவரை வருவாய் அளவு ரூ 27408 முதல் 27481 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்போஸிஸ் லாபம் அறிவிக்கப்பட்டவுடன் பங்குச் சந்தையில் அதன் பங்கு விலை சரியத் துவங்கியது. 7.38 சதவீத அளவு பங்கு விலை குறைந்தது. வரும் ஜூன் மாதத்துடன் முடியும் காலாண்டுக்கான வருவாய் ரூ 7,311 - 7,382 ஆக இருக்கும் என இன்போஸிஸ் அறிவித்துள்ளது.

English summary
IT major Infosys on Friday reported nearly 14% in consolidated net profit at Rs 1,818 crore for the fourth quarter ended March 31, 2011, which is less than the market expectations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X