For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசன் அலி பாஸ்போர்ட்: புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கை விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு பிரதமர் அனுமதி

By Chakra
Google Oneindia Tamil News

Iqbal Singh
டெல்லி: பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கை விசாரிக்க அமலாக்கப் பிரிவினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி அளித்துள்ளார்.

வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதுடன், ரூ.75,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புனே குதிரை பண்ணை அதிபர் அசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

1997ம் ஆண்டில் அலி பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்ததாக புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய அரசிடம் அமலாக்கப் பிரிவு அனுமதி கோரினர்.

இதையடுத்து இக்பால் சிங் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரத்தை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இந் நிலையில் சிங்கை விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு பிரதமர் அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியது. அந்த ஒப்புதல் தகவல் ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையே கவர்னர் இக்பால்சிங் இன்று அல்லது நாளை டெல்லியிலிருந்து புதுச்சேரி திரும்புவார் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் புதுவை வந்ததும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

English summary
The Prime Minister's Office has given a nod to questioning of Puducherry Lt Governor Iqbal Singh by the Enforcement Directorate for his alleged links with suspected money launderer Hasan Ali Khan. Sources said the clearance was given when the file seeking such permission reached the PMO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X